Published : 04 Oct 2024 06:08 AM
Last Updated : 04 Oct 2024 06:08 AM

தெற்கு ரயில்வேயில் 3 வழித்தடங்களில் 271 கி.மீ. தொலைவுக்கு ‘கவாச்’ தொழில்நுட்பம்

கோப்புப் படம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல்கட்டமாக 3 வழித்தடங்களில் 271 கி.மீ.தொலைவுக்கு ரயில்கள் இயக்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் ‘கவாச்’ தொழில்நுட்பத்தைசெயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவு ரயில்களை பாதுகாப்பாக இயக்க, நாட்டின் முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், படிப்படியாக 2,216 கி.மீ. தொலைவுக்கு கவாச்தொழில்நுட்பத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், முதல்கட்டமாக சென்னை – அரக்கோணம் வரை 68 கி.மீ. தொலைவுக்கும், அரக்கோணம் - ரேணிகுண்டா வரை 65 கி.மீ. தொலைவுக்கும், சென்னை– கூடூர் வரை 138 கி.மீ. தொலைவுக்கும் கவாச் தொழில்நுட்பம் நிறுவப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஜோலார்பேட்டை - சேலம் - ஈரோடு, விழுப்புரம் - காட்பாடி, கரூர்- திண்டுக்கல், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, மதுரை - கன்னியாகுமரி, சொரனூர் - சேலம், ஈரோடு - கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது.

இதல், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் - கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் முதல் கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவாச் தொழில்நுட்பம்: ரயில் இன்ஜின், ரயில் பாதை,சிக்னல் என மூன்றையும் இணைத்துஉருவாக்கப்பட்டதே கவாச் தொழில்நுட்பம். ரயில் பாதையின் நடுவில்,ஒவ்வொரு 4 கி.மீ. தொலைவில்சிப்க்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும்.

எஸ்பிஏடி சிக்னல் பாஸிங்அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். அதோடுமட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தைக் குறைக்கும்.ஒரு கி.மீ. தொலைவுக்கு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x