Published : 03 Oct 2024 08:39 PM
Last Updated : 03 Oct 2024 08:39 PM
சென்னை: தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் ஜி.சிவக்குமார், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.பவானி, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார், ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் வி.ராமலட்சுமி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.குமாரவேல், திருச்சி கி.அ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், மதுரை மருத்துவக் கல்லூரி காது-மூக்கு-தொண்டை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ் குமார், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.அமுதா ராணி, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பி.லியோ டேவிட், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜே.தேவி மீனாள், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி தொழுநோய் சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.கலைவாணி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி காது-மூக்கு-தொண்டை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.முத்துசித்ரா, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் வி.லோகநாயகி, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.ஜெயசிங், விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.ரோகிணி தேவி, வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT