Published : 28 Aug 2014 11:09 AM
Last Updated : 28 Aug 2014 11:09 AM

அம்பத்தூரில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம்: உங்கள் குரலில் பொதுமக்கள் புகார்

அம்பத்தூரில் கடந்த பத்து ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் கிடப் பில் போடப்பட்டுள்ளதாக ‘தி இந்து - உங்கள் குரல்’ பகுதியில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அம்பத்தூர் புதூர் பாரதி நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் செயலாளர் மோகன் ராவ், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:

அம்பத்தூரில் வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால், மழைக்காலங்களில் தெருக்களில் மழைநீருடன், கழிவு நீர் தேங்கி நின்றது. இதற்கு தீர்வுகாணும் விதமாக, கடந்த 2000ம் ஆண்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தொடங்கியபோது, அது ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இத்திட்டத்துக்காக சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் களைப் பதிக்க தீர்மானிக்கப் பட்டது. ஆனால், இதுவரை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும்தான் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து ரூ.7,500 முன்பணமாக வசூலிக்கப்பட்டது.

அம்பத்தூருக்கு பிறகு ஆவடி மற்றும் திருவள்ளூரில் ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. ஆனால், அம்பத்தூரில் இத்திட்டம் இன்னும் நிறைவேற்றி முடிக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இவ்வாறு மோகன் ராவ் கூறினார்.

இதுகுறித்து, சென்னை குடிநீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “அம்பத்தூரில் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் சில காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் இத்திட்டம் முழுவதுமாக நிறைவேற்றி முடிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x