Published : 03 Oct 2024 04:23 AM
Last Updated : 03 Oct 2024 04:23 AM
சென்னை: தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உட்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை முதல்வரின் செயலராக உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலர் கே.கோபால் உயர்கல்வித் துறை செயலராகவும் அப்பதவியில் இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வரின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ்லக்கானி வருவாய் நிர்வாக ஆணையராகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் இ.சுந்தரவல்லி கல்லூரிக் கல்வி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பொதுத் துறை இணை செயலராக இருந்த பி.விஷ்ணு சந்திரன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமூகநலத் துறை ஆணையர் வி.அமுதவல்லி கைத்தறி, கைத்திறன் மற்றும் ஜவுளித் துறை செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை சிறப்பு செயலர்ஆர்.லில்லி, சமூக நலத்துறை ஆணையராகவும் சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஜவுளித்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பிரவன்குமார் ஜி.கிரியப்பனவர் பொதுத்துறை துணை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இவர் தலைமைச்செயலர் அலுவலகத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹு கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலர்பணியையும் கூடுதலாக கவனிப்பார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமாருக்கு மனிதவள மேலாண்மைத் துறை செயலர் பணி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை செயலராக இருந்த கே.நந்தகுமார், மின்வாரியம், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும்மேலாண்மை இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். கைத்தறி, கைத்திறன் மற்றும் ஜவுளித் துறை செயலராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ்,தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டான்சிட்கோ) தலைவராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.ஸ்வர்ணா, ராஷ்ட்ரிய உச்சதார்சிக்சா அபியான் (ரூசா) திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதித்துறை துணை செயலர் எம்.பிரதிவிராஜ் சென்னை மாநகராட்சி நிதி மற்றும் வருவாய் பிரிவு துணை ஆணையராகவும் மதுவிலக்கு மற்றும்அமல் பிரிவு முன்னாள் ஆணையர்ஜெ.ஜெயகாந்தன் தமிழ்நாடு நீர்நிலைமேம்பாட்டு முகமையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT