Published : 02 Oct 2024 06:26 AM
Last Updated : 02 Oct 2024 06:26 AM

தஞ்சை பெரிய கோயில் அருகே சாலை அமைக்க அனுமதியா? - உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெருவுடையார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரன் கோயில் கடந்த40 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டும், பூஜைகள் நடைபெறாமலும் உள்ளது.

மேலும், பராமரிப்புக் குறைபாடு காரணமாக கோயில் சேதமடைந்துள்ளது. எனவே, இந்திரன் கோயிலை திறந்து தினமும் பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கௌரிஅமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில், “இதுபோன்ற கோரிக்கையுடன் இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளது. 2008-ல் தேவஸ்தானம் தரப்பில்புதிய சிலை வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “தஞ்சைபெரிய கோயில், கங்கை கொண்டசோழபுரம் கோயில்கள் தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளன.இவற்றைப் பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை. ஆனால்,தஞ்சை பெரிய கோயிலில் இருந்து20 மீட்டர் தொலைவில் தேசியநெடுஞ்சாலை அமைக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தால் ஏராளமான கனரகவாகனங்கள் அப்பகுதியைக் கடந்து செல்லும்.

இதனால் வருங்காலத்தில் கோயிலின் நிலை என்னவாகும் என யோசிக்கவில்லை. பழங்கால நினைவுச் சின்னங்கள் அல்லாமல் கல்லறைகளைப் பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளதுபோல் தெரிகிறது.

எனவே, இந்த மனு தொடர்பாக அறநிலையத் துறை முதன்மைச் செயலர், தொல்லியல் துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை அக். 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x