Published : 30 Sep 2024 08:14 AM
Last Updated : 30 Sep 2024 08:14 AM

‘பாஜக அழுத்தத்தால் மனோ தங்கராஜ் நீக்கம்’ - மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சந்தேகம்

மனோ தங்கராஜ் | வாஞ்சிநாதன்

மதுரை: பாஜகவினர், கனிமவளக் கொள்ளையர் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது, என மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பினார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியது முற்போக்காளர் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை திராவிட மாடலாக மாற்றியவர் அவர். மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகம் எழுதியவர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடியவர். ஆவினில் ஊழலை ஒழித்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியிலும், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தவர். அவர் செய்த தவறு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கன்னியாகுமரி, நெல்லை பகுதியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அதானி துறைமுகத்துக்கு கொண்டு செல்வதை எதிர்த்து, பெரும்பான்மை குவாரிகளை மூட நடவடிக்கை எடுத்தார். பாஜகவினர், கனிமவளக் கொள்ளையர் கொடுத்த அழுத்தத்தால் தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆர்எஸ்எஸ்,பாஜகவை எதிர்க்கும் கொள்கை யாளர், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குவதன் மூலம் மக்களுக்கு என்ன செய் தியை சொல்கிறீர்கள்.

மதுரையில் அமைச்சர் பழநிவேல் தியாகராஜனை டம்மியாக்கினார்கள். தற்போது மனோ தங்கராஜ் நீக்கப்பட்டுள்ளார். தங்கம் தென்னரசுக்கு டம்மியான பதவி கொடுத் துள்ளனர். கொள்கை ரீதியாக இருப்போருக்குப் பிரதி நிதித் துவம் கிடைக்கக் கூடாது என திமுக விரும்புகிறதா? முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகே இது நடப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன? மனோ தங்கராஜ் சிறுபான்மையினரின் பிரதிநிதி. நாடார் சமூ கத்தை சேர்ந்தவரை நீக்குவதால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தேவையில்லையா என்ற கேள்வி யும் எழுகிறது.

பாஜகவோடு திமுக நெருங் குகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இதற்கு முற்போக்கு அமைப்புகள், கி.வீரமணி, திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைவரும் கேள்வி எழுப்ப வேண் டும். மனோ தங்கராஜை மீண்டும்அமைச்சரவையில் சேர்க்க வேண்டும். கொள்கைவாதிகளை நீக்குவது பற்றி மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இதன் மூலம் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x