Published : 29 Sep 2024 11:25 AM
Last Updated : 29 Sep 2024 11:25 AM
சென்னை: ‘துணை முதல்வர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்கின்றனர்.
இந்நிலையில், தனக்கு பதவி வழங்கப்பட்டது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார் - அண்ணா - கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இவரை போலவே, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவை தற்போது 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 14 Comments )
உதயநிதி அவர்கள் இந்த பதவிக்கு பொருத்தமானவராக ஆக்கி கொள்ளவேண்டும். காரணம் ஸ்டாலினுக்கு இந்த பதவி சீக்கிரம் கொடுத்து விடவில்லை கலைஞர். பல ஆண்டுகள் பல தேர்தல்களை சந்தித்து பல பொறுப்புகளில் அனுபவம் பெற்று (அதுவும் கட்சி பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சிக்கு வரமுடியாமல்) கட்சியை கட்டமைப்பாய் தந்தையுடன் சேர்ந்து காப்பாற்றி அதன் பின்னரே இந்த பதவியை அவருக்கு கொடுத்தார் கலைஞர்.
3
1
Reply
MGR அழைத்தும் அதிமுக வுக்கு செல்லாமல் திமுகவே கதியென்று கட்சிக்காக உழைத்தவர்களில் முதன்மையானவர் துரைமுருகன்....... அவருக்கு தகுதி இல்லை என்றால் அதற்க்கு பெயர்தான் திராவிட சனாதனம்.
8
10
Reply
//ஆமைக்கறி விமர்சனம் அல்ல அவதூறு......மாட்டுக்கறி தின்பதை பிஜேபி விமர்சிப்பதுபோல் இலங்கை தமிழர்களின் உணவை கொச்சை படுத்திடுவதற்கு பெயர் விமர்சனம் அல்ல அவதூறு// போர் முனையில் தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டிருந்தவர்கள்... ஆமைக்கறி சாப்பிட்டார்கள் என்று சொன்னது தான் அவதூறு. பலகாலமாக பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களே... அவர்கள் மிக மிக சாதாரணமான உணவுதான் உட்கொண்டார்கள்... அதைத்தான் எங்களுக்கும் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாக தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட போர்முனையில் இருந்தவர்களை கொச்சைப்படுத்தியது சீமான் தான்.
4
2
//ஆமைக்கறி விமர்சனம் அல்ல அவதூறு// யார் அதை சொன்னது? அண்ணன் சீமான் தான் சொன்னார். அவர் சொல்லவில்லை என்றால் எங்களுக்கு எப்படி தெரியும்?
4
1
ஆமைக்கறி விமர்சனம் அல்ல அவதூறு......மாட்டுக்கறி தின்பதை பிஜேபி விமர்சிப்பதுபோல் இலங்கை தமிழர்களின் உணவை கொச்சை படுத்திடுவதற்கு பெயர் விமர்சனம் அல்ல அவதூறு....
1
3
துரைமுருகனைவிட உதயநிதிக்கு இருக்கும் தகுதியை சொல்லவேண்டியதுதானே....
1
4
//தேர்தலில் நின்றால் விமர்சனம் செய்வோம்// அப்போ ஆமைக்கறிக்கும் விமர்சனம் இருக்குன்னு சொல்லுங்க.
3
1
தேர்தலில் நின்றால் விமர்சனம் செய்வோம் . ......
1
4
துறை முருகன் மீது தங்களுக்கு அவ்வளவு அக்கறையா?
10
8