Published : 28 Sep 2024 05:57 AM
Last Updated : 28 Sep 2024 05:57 AM

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதா ஆர்எஸ்எஸ் எடுத்த முடிவு: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்,‘வக்பு சட்டத் திருத்த மசோதா ஆலோசனைகளும், ஆட்சேபனைகளும்' தலைப்பிலான கருத்தரங்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பசீர் எம்.பி., மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ‘வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும்’ கருத்தரங்கம் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.ரகுமான்கான் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந் துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாமுஸ்லிம்களின் மத உரிமையில் தொடுக்கப்பட்டுள்ள தலையீடு. இந்த நடவடிக்கை நாக்பூர் ஆர்எஸ்எஸ் எடுத்த முடிவு ஆகும்.வக்பு சொத்துகள் என்பவை முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் அல்லாத மன்னர்களும், செல்வந்தர் களும் இறைபணி நோக்கத்துக்காக தானமாக வழங்கியவை.

அர்ப்பணிப்புக்காகவும், மத பணிகளுக்காகவும் அளிக்கப் பட்டவை. அத்தகைய வக்பு சொத்து களை அபகரிக்க மத்திய அரசுமுயற்சி செய்கிறது. முஸ்லிம்களிடம் ஏராளமான சொத்துகள் குவிந்துகிடக்கின்றன என்ற தோற்றத்தை மற்ற மத மக்களிடையே உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டுவருகிறது.

சுமார் 25 ஆண்டு கால ஆலோசனைகளுக்கு பின்னர் 1956 வக்புசட்டத்தில் தேவை யான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அப்படி இருக்கும்போது இப்போது திடீரென மீண்டும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? வக்பு சொத்துகளை வேறு பெயருக்கு மாற்ற முடியாது. ஒரு சொத்து வக்பு சொத்தாக மாற்றப்பட்டுவிட்டால் அது காலம்முழுவதும் வக்பு சொத்துதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போது இருக்கிற வக்பு சட்டத்தில் வக்பு வாரியத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தில் தன்னாட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டு அரசு தலையீடு அதிகம் ஏற்படும். முந்தைய சட்டத்தில் வக்பு வாரியம் விதிமுறைகளை மீறினால் மட்டுமே அரசு அதில் தலையிட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அறிமுகவுரை ஆற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிதேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்காதர் மொய்தீன், ‘‘வக்பு சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் ஏறத்தாழ 160 திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர். சுமார் 70புதிய சேர்க்கைகள் சேர்க்கப் பட்டுள்ளன.

திருத்தம் என்று சொல்லி சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் அடியோடு மாற்றிவிட்டனர். உண்மையில் வக்பு சட்டத்தைஇல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த சட்டத்திருத்த மசோதா மதச்சார்பின்மை, மத உரிமை, கூட்டாட்சி, அடிப்படை உரிமை அனைத்துக்கும் எதிரானது’’ என்று குறிப்பிட்டார்.

கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான பி.கே குஞ்ஞா லிக்குட்டி, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர்எம்.பி, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன், தேசிய துணைத் தலைவர் அப்துஸ் ஸமது ஸமதானி எம்.பி., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x