Last Updated : 27 Sep, 2024 09:14 PM

 

Published : 27 Sep 2024 09:14 PM
Last Updated : 27 Sep 2024 09:14 PM

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும்: வேளாண் பல்கலை.கணிப்பு

கோவை: “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும்” என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “எதிர்வரக்கூடிய 2024-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2024-ம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

இதில் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம்: சென்னை 810 -850; கோவை 338-360; மதுரை 370-390; திருநெல்வேலி 515-540; திருச்சி 379-410; சேலம் 331 -360; நீலகிரி 501-510; திருப்பூர் 306-330; கரூர் 313-330; கன்னியாகுமரி 533-540; நாமக்கல் 270-270; மயிலாடுதுறை 888-900; நாகப்பட்டினம் 935 -950; தஞ்சாவூர் 579-610; திருவாரூர் 725-760; திருவண்ணாமலை 450-490; தூத்துக்குடி 442-450; ராணிப்பேட்டை 406-420; கிருஷ்ணகிரி 278-290; தருமபுரி 314-340; கடலூர் 702-720” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x