Published : 17 Aug 2014 09:30 AM
Last Updated : 17 Aug 2014 09:30 AM

விஸ்வரூபம் எடுக்கும் ஸ்டாலின் - கனிமொழி மோதல்: முதல்வர் வேட்பாளரை அறிவிக்க திமுகவில் போர்க்கொடி

திமுகவில் ஸ்டாலின் - கனிமொழி இடையே மோதல் வலுத்து வருவதாக கட்சித் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். 4 மாவட்டங் களில் ஸ்டாலின் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டங்களில், ஊழலில் சிக்கியவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று மறைமுகமாக கனிமொழிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தாகவும் அவர்கள் கூறினர்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து திமுக வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். அந்தப் பிரச்சி னையே நீருபூத்த நெருப்பாக இருக்கும் சூழலில் தற்போது கனிமொழி - ஸ்டாலின் இடையே யான மோதல் வலுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே கனிமொழி பரிந்துரைந் தவர்களுக்கு சீட் தரவில்லை என்று ஆதரவாளர்கள் புகார் கூறினர்.

இந்நிலையில், ஸ்டாலின் - கனிமொழிக்கு இடையேயான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்து வருவதாகவும், கனிமொழியை ஓரம்கட்ட ஸ்டாலின் தரப்பு காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டங் களில் பெரும்பாலான நிர்வாகிகள் ஸ்டாலினை அடுத்த முதல்வராக முன்மொழியவும், ஊழலில் சிக்கியவர்களை கட்சியை விட்டு நீக்கவும் வலியுறுத்தியதாக கூறப் படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கட்சியின் நிர்வாகிகள் சிலர், “காஞ்சிபுரத்தில் நடந்த முதல் கூட்டத்தில் பேசிய பலரும் அடுத்த முதல்வராக ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்றனர். ஒன்றிய செயலாளர்கள் சிலர், கட்சியில் இருக்கும் ஊழல் பேர்வழிகளை களை எடுக்க வேண்டும் என்றனர். கன்னியா குமரி கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனும், ‘ஊழல் செய்பவர்கள் கட்சியி லிருந்து ஒதுங்கியிருக்க வேண் டும்’ என்றார். இதையே அகஸ் தீஸ்வரம் ஒன்றியச் செயலா ளர் தாமரை பாரதியும் வலியுறுத் தினார். தூத்துக்குடி மற்றும் விருதுநகர் கூட்டங்களிலும் அடுத்த முதல்வராக ஸ்டாலினை உடனடி யாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்’’ என்றனர்.

இதுகுறித்து ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் வைக்கும் கோரிக்கை யில் என்ன தவறு இருக்கிறது? நியாயமாக தளபதிக்கு கிடைக்க வேண்டிய உரிமையைத்தானே கேட்கிறோம். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சிக்கு மிகவும் சிக்கலாகிவிடும். அதேபோல ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்களை ஒதுக்கி வைத்தால்தான் அடுத்த தேர்த லிலாவது மக்கள் திமுகவை அங்கீகரிப்பர். இதைத்தான் அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம் வலியுறுத்தினார். அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். கல்யாணசுந்தரம் அனுப்பியது போன்ற கடிதத்தை ஆயிரக் கணக்கான தொண்டர்கள் அறிவா லயத்துக்கு அனுப்பத் தயாராகி வருகின்றனர். எத்தனை பேரை கட்சியைவிட்டு நீக்குகிறார்கள் என்று பார்ப்போம்” என்றனர்.

ஆனால், கனிமொழி ஆத ரவாளர்களோ, “நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பை முழுமை யாக ஸ்டாலினிடம்தான் தலைவர் ஒப்படைத்தார். ஆனால், திமுக வுக்கு வரலாறு காணாத தோல்வியைத் தேடித்தந்தார் ஸ்டாலின். அடுத்த சட்டசபைத் தேர்தலையும் அவரை முன் னிறுத்தி நடத்தினால் திமுகவுக்கு அழிவு நிச்சயம். ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். 2ஜி மட்டும்தான் ஊழல் வழக்கா? சொத்துக்குவிப்பு, நில அபகரிப்பு வழக்குகள் எல்லாம் யார், யார் மீது இருக்கிறதோ அத்தனை பேரையும் நீக்கத் தயாரா?” என்று கேட்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x