Published : 23 Sep 2024 06:30 AM
Last Updated : 23 Sep 2024 06:30 AM

சென்னையில் கடல் சீற்றம்: சீனிவாசபுரம் பகுதியில் மீனவர் வீடுகள் சேதம்

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. | படம் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னையில் அமாவாசை தினமான செப்.16-ம் தேதிமுதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 2 ஆள் உயரத்துக்கு பலத்த சத்தத்துடன் ராட்சதஅலைகள் எழும்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக சென்னை மெரினா அடுத்த சீனிவாசபுரம் கடலோர பகுதியில் தொடர் அலையால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் அப்பகுதியில் கடற்கரையை ஒட்டி கட்டப்பட்டுள்ள பல மீனவர்களின் வீட்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் கடல் அலை புகுந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். பலர், தங்கள் வீடுகளை பாதுகாக்க ஏதுவாக, மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

கடல் சீற்றத்தால் ஏற்பட்டபாதிப்புகளை வருவாய்த்துறைஅதிகாரிகள் பார்வையிட்டுஆய்வு செய்தனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர்மாவட்ட கடலோர பகுதிகளில்அடுத்த சில தினங்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும்என பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசியமையம் (இன்காய்ஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x