Last Updated : 20 Sep, 2024 06:24 PM

2  

Published : 20 Sep 2024 06:24 PM
Last Updated : 20 Sep 2024 06:24 PM

அரசு சார்பில் முரணான, திசைதிருப்பும் தகவல்களை வழங்கக் கூடாது: தமிழக தகவல் ஆணையர்

நாகர்கோவில்: அரசு சார்பில் வழங்குவதில் முரணான மற்றும் திசைதிருப்பும் தகவல்களை வழங்கக்கூடாது என பொது தகவல் அலுவலர்களிடம் தகவல் உரிமை ஆணைய கூட்டத்தில் தமிழக தகவல் ஆணையர் செல்வராஜ் தெரிவி்ததார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் உரிமை ஆணைய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் ஆணையர் செல்வராஜ் கலந்துகொண்டு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அவர் தெரிவிக்கையில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 19, 20 ஆகிய இரு நாட்கள் மனுதாரர்கள் மற்றும் பொதுதகவல் அலுவலர்களையும் விசாரணை செய்து வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை, வாக்புவாரியம், உள்ளாட்சி தணிக்கைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மனுதார்கள் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் வேலைநாட்களில் உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பவேண்டும். மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கவேண்டும்.

தகவல்கள் வழங்கப்படும் அலுவலர் பெயர் மற்றும் கையொப்பம் பொதுதகவல் அலுவலரின் முத்திரை கட்டாயம்இடவேண்டும். மனுதாரருக்கு மேல் முறையீட்டு அலுவலர் பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கப்படவேண்டும். அதிகப்படி தகவல்கள் வழங்கும் நிலையில் பக்கத்திற்கு ரூ.2 வீதம் கணக்கிட்டு பணம் செலுத்தும் வழிவகைகள் தெரிவிக்க வேண்டும்.

மனுதாரர் மனுவில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தகவல்கள் வழங்கவேண்டும். தவறான தகவல்கள், முரணான தகவல்கள், திசைதிருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. கட்டாயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களை ரெஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் பெயர், முகவரி பலகை தங்கள் அலுவலத்தில் பார்வைக்கு வைக்கப்படவேண்டும். ஆணையத்திலிருந்து வருகின்ற விசாரணை சம்மன் பெற்றால் கட்டாயம் விசாரணைக்கு வருகை தர வேண்டும். என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x