Published : 06 Aug 2014 09:11 AM
Last Updated : 06 Aug 2014 09:11 AM

சிறுநீரக தானத்தில் ஜி.ஹெச். சாதனை: 1000-வதாக தானம் செய்த பெண்ணுக்குப் பாராட்டு

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1000-வது நபராக சிறுநீரக தானம் செய்த இளம்பெண்ணுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உறுப்பு தானம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக உடல் உறுப்பு தான தினம் இன்று (ஆகஸ்ட் 6) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யில் செவ்வாய்க் கிழமை நடந்த நிகழ்ச்சியில், இங்கு 1000-வது நபராக சிறுநீரக தானம் செய்த இளவரசி என்ற இளம்பெண்ணுக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கண்டிதம் பேட்டையை சேர்ந்தவர் இளவரசி (27). இவர் தனது சிறுநீரகத்தை கணவர் கலையரசனுக்கு (38) அளித்துள்ளார்.

இளவரசி கூறும் போது, ‘‘எனக்கும் என் கணவருக்கும் ரத்தப் பிரிவு ஒன்றாக இருந்ததால் சிறுநீரகம் பொருந்தியது. உடல் உறுப்புகளை தானம் செய்ய யாரும் பயப்பட வேண்டாம். சிறுநீரக தானம் செய்து 30 நாட்கள் ஆகின்றன. நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்’’ என்றார். இந்த தம் பதிக்கு சரண்யா (7), சக்தி ப்ரியன்(4) என்ற குழந்தைகள் உள்ளனர்.

சிறுநீரக தானம் குறித்து சிறுநீரக வியல் துறைத் தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

சிறுநீரகம் செயலிழந்தவருக்கு நெருங்கிய உறவினர்களிடம் இருந்தோ, மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்தோ சிறுநீரகத்தை தானமாகப் பெற்று பொருத்தலாம். கலையரசனுக்கு இளவரசி ரத்த சம்பந்தப்பட்ட உறவு இல்லை என்றாலும், அவரது சிறுநீரகம் பொருந்தியது. இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் 1986-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1003 சிறு நீரகங்கள் உறவினர்களிடம் இருந்தும், 2008-ம் ஆண்டு முதல் 140 சிறுநீரகங்கள் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதில் 57 பேர் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களை சேர்ந்தவர்கள். 3 பேர் நேபாளம், இலங்கையை சேர்ந்தவர்கள்.

அதிகபட்சமாக கடந்த ஜூலை யில் 11 பேர் சிறுநீரக தானம் செய் துள்ளனர். இதில் 7 சிறுநீரகங்கள் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டன.

இவ்வாறு என்.கோபால கிருஷ் ணன் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஆர்.விமலா கூறும்போது, ‘‘தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே சிறுநீரக தானம் அதிக அளவில் நடந்தது ராஜீவ்காந்தி மருத்துவமனையில்தான். அந்த வகையில் எங்கள் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x