Published : 17 Sep 2024 05:54 AM
Last Updated : 17 Sep 2024 05:54 AM
சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 350 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநருக்கு அலுவலர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மருத்துவ பணிகள் இயக்குநருக்கு துறையின் அமைச்சு பணி அலுவலர் சங்க மாநில தலைவர் த.சங்கர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும் 149 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி ஆணை வெளியிட்டதற்கு முதலில் நன்றி தெரிவிக்கிறோம்.
டிஎன்பிஎஸ்சி மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் இடையே பணிமூப்பு (சீனியாரிட்டி) முரண்பாடு தொடர்பான வழக்கு காரணமாக, கடந்த13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த வழக்கின்மீது போர்க்கால நடவடிக்கைமேற்கொண்டு, வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அவர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
கால்நடை பராமரிப்பு துறைக்கு ஒப்பளிக்கப்பட்ட 424 உதவியாளர் பணியிடங்களில் 350-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அவர்களது சிரமத்தை கருத்தில்கொண்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பதவி உயர்வுகூடகிடைக்காமல் இருக்கும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment