Published : 12 Sep 2024 05:22 AM
Last Updated : 12 Sep 2024 05:22 AM

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வயநாடு பேரிடருக்கு ரூ.35 லட்சம் நிவாரணம்

சென்னை: வயநாடு பேரிடருக்கு ரூ.35 லட்சம் நிதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்ட அறிக்கை விவரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலதரப்பினரும் உதவிகள் வழங்கிவருகின்றனர். அதன்படி வயநாடு பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு எங்கள்அமைப்பின் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பினராயி விஜயனிடம்.. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்களிடம் இருந்து வயநாடு பேரிடருக்கு நிவாரண நிதியாக ரூ.35 லட்சத்து 854 திரட்டப்பட்டது. அந்த நிதியை சங்கத்தலைவர் மூ.மணிமேகலை தலைமையிலான குழுவினர், திருவனந்தபுரத்தில் கேரள மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x