Last Updated : 08 Sep, 2024 12:09 PM

 

Published : 08 Sep 2024 12:09 PM
Last Updated : 08 Sep 2024 12:09 PM

கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி | கோப்புப் படம்

கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தண்ணன் குளம், பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி). அம்பராம்பாளையம் ஆறு (ஆனைமலை,காளிப்பக் கவுண்டன்புதூர்). நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு). ஆச்சான் குளம், நீலாம்பூர், உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்), நடுமலை ஆறு, வால்பாறை, சாடிவயல், வாளையார் அணை, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி,

வெள்ளக்கிணறு குளம், நாகராஜபுரம் குளம், பிஏபி வாய்க்கால், செஞ்சேரி பிரிவு, சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்), பிஏபி வாய்க்கால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்) ஆகிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும், மேலும் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பொருட்டு எடுத்துச் செல்ல பொதுமக்கள், அமைப்புகள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x