Published : 06 Sep 2024 04:20 AM
Last Updated : 06 Sep 2024 04:20 AM

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திரகுமாரியின் கணவர் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி

சென்னை: ஊழல் வழக்கில் இந்திரகுமாரியின் கணவர் உள்ளிட்டோருக்கு விதிக் கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-96 அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரகுமாரி, தனது கணவர் பாபு நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு ரூ. 15.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

சமூக நலத்துறை செயலர் புகார்: இந்த நிதியைக் கொண்டு வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான பள்ளி தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றவில்லை என சமூகநலத் துறை செயலர் அளித்த புகாரின்பேரில் போலீஸார்ஊழல் வழக்குப்பதிவு செய்திருந் தனர்.

அதன்படி முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன், சண்முகம், வெங்கடகிருஷ்ணன் ஆகிய 5 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும். ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை முன்னாள் செயலாளரான சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப் பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திரகுமாரி, பாபு, சண்முகம் ஆகியோர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது கடந்த ஏப்ரல் மாதம் இந்திரகுமாரி இறந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்திரகுமாரியின் கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட் டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x