Published : 04 Sep 2024 09:11 PM
Last Updated : 04 Sep 2024 09:11 PM

“சென்னையில் நாம் ஒன்றாக சைக்களில் பயணிப்போம்” - ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்

சிகாகோவில் மிதிவண்டி பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம். நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

சிகாகோ நகரில் மாலை மிதிவண்டிப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதுகுறித்த காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதைப் பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சகோதரரே! நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்?” எனக் கேட்டுப் பதிவிட்டிருந்திருந்தார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம்!

நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்,” எனத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x