Published : 04 Sep 2024 03:07 PM
Last Updated : 04 Sep 2024 03:07 PM
சென்னை: பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எதிர்வரும் செப்.10ம் தேதி மாலை 4 மணியளவில், எழும்பூர், CBCID வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், (குற்றம்) அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எதிர்வரும் செப்.10ம் தேதி மாலை 4 மணியளவில், எழும்பூர், CBCID வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் செப்.10ம் தேதி மாலை 4 மணிக்குள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு. இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான GST தொகையை அவரவர் GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் வாகனத்தின் பழைய உதிரி பாகங்களின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்துக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் . மேலும், விபரங்களுக்கு 9952022860 / 9962488150 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT