Published : 04 Sep 2024 02:45 PM
Last Updated : 04 Sep 2024 02:45 PM
சென்னை: பிஎஃப் அலுவலக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
தாம்பரத்தில் பிஎஃப் (தொழிலாளர் வைப்பு நிதி) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
அதில், தாம்பரத்தில் இயங்கி வரும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் போதிய இட வசதியின்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணத்தால் பணி செய்வதிலும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே, பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில், பிஎஃப் அலுவலகத்தை இடமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல், ஊழியர்கள் பற்றக்குறையை போக்குவது, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் மனுவை வழங்கினர். இந்த சந்திப்பின் போது, சங்கத்தின் நிர்வாகிகள் சந்திர சேகர், வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT