Published : 03 Sep 2024 03:20 PM
Last Updated : 03 Sep 2024 03:20 PM

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் தீபாவளி டிக்கெட் முன்பதிவுக்கு மக்கள் ஆர்வம்

சென்னை: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை நேற்று தொடங்கிய நிலையில், பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்த ரயிலின் ஏசி சேர் கார் பெட்டிகளில் செப்.5, 6, 7 ஆகிய 3 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு இந்த ரயிலில் சொந்த ஊர் செல்வதற்காக, டிக்கெட் முன்பதிவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவை உட்பட 3 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக புதுடெல்லியில் இருந்தபடி கடந்த 31-ம் தேதி தொடங்கி வைத்தார். இவற்றில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயும், மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயும் வந்தே பாரத் ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே ரயில்வே அறிவித்து இருந்தது.

அதன்படி, இந்த ரயில்களின் வழக்கமான சேவை நேற்று தொடங் கியது. குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏசி சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் சேர் பெட்டி இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற் கொண்டனர். இந்த ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது," சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு தினசரி பிற்பகலில் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுபோல, புதிய வந்தே பாரத் ரயிலுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

விற்றுத் தீர்ந்தன: இந்த ரயிலில் அடுத்த சில நாட்களுக்கு முன்பதிவு விரைவாக நடைபெற்று வருகிறது. அதாவது, சென்னை - நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயிலின் ஏசி சேர் பெட்டிகளில் செப்.5, 6, 7 ஆகிய தேதிகளிலும், எக்ஸிக்யூட்டிவ் சேர் பெட்டிகளில் செப்.5,7 ஆகிய தேதிகளிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. செப்.6-ம் தேதி அன்று எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் 3 டிக்கெட்கள் மட்டுமே இருந்தன. இதுபோல, தீபாவளி
பண்டிகைக்கு இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, தீபாவளி பண்டிகை அக்.31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அக்டோபர் 29-ம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இந்த ரயிலில் செல்ல 31 இடங்கள் மட்டுமே இருந்தன. இதேபோல, நாகர்கோவிலில் இருந்து நவ.3-ம் தேதி சென்னைக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காண்பித்தது. மற்ற முக்கிய நாட்களிலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x