Published : 10 Jun 2018 08:51 AM
Last Updated : 10 Jun 2018 08:51 AM
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்.2-ம் தேதி கிழக்கு கோபுர வாசல் அருகே வீர வசந்தராயர் மண்டபம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன. தற்போது வசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, பக்தர்கள் மொபைல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் மொபைல்போனை பாதுகாக்க, மேற்கு, வடக்கு கோபுர வாசல் பகுகளிலும், அம்மன் சன்னதியிலும் பாதுகாப்பு பெட்டக அறை வசதி ஏற்படுத்தப்பட்டது. மொபைல்போனை பாதுகாக்க ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த செல்போன்களை லக்கேஜ் ஸ்கேனரில் பரிசோதனை செய்தபிறகே அந்த பெட்டகத்தில் வைக்கின்றனர். செல்போன் பாதுகாப்பு அறை அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
இங்கு மொபைல்போன் மட்டுமே வைக்க வேண்டும் என்றும், டேப்லெட், ஐபேட் உள்ளிட்ட இதர மின்னணு சாதனஙகள் வைக்க அனுமதியில்லை என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வெளியூர் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடு குறித்து தெரிவதில்லை.
இக்கோயிலில் ஏற்கெனவே கேமரா கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் என்ன செய்ய முடியும்? உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT