Published : 20 Jun 2018 07:25 AM
Last Updated : 20 Jun 2018 07:25 AM
‘நான் இந்திய அரசிடமும், தமிழக அரசிடமும் ஒரு தாயாக மடி ஏந்தி பிச்சை கேட்கிறேன். என மகனை திரும்ப என்னிடம் தாருங்கள்’ என இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்து மயக்கமடைந்த மகேஸ்வரி, சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மகன் வருவார் என நம்பிக்கையோடு இருந்தேன். கடந்த 27 ஆண்டுகளாக மகனை பார்க்காமல் ஒரு தாயால் எப்படி இருக்க முடியும். இந்திய குடியரசுத் தலைவர் இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.
இந்திய அரசிடமும், தமிழக அரசிடமும் ஒரு தாயாக மடி ஏந்தி பிச்சை கேட்கிறேன். எனது மகனை திரும்ப என்னிடம் தாருங்கள். எனது மகனை நான் பார்க்க வேண்டும். மகனை நான் பார்க்காவிட்டால் இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT