Published : 31 Aug 2024 10:41 PM
Last Updated : 31 Aug 2024 10:41 PM

அன்று மாணவி... இன்று ‘பொறுப்பு டீன்’... - மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுவாரஸ்யம்!

பேராசிரியர் செல்வராணி

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘பொறுப்பு டீன்’ தர்மராஜ் ஒய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக நியமிக்கப்பட்ட இருதயவில் பேராசிரியர் செல்வராணி உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், எம்பிபிஎஸ், எம்டி போன்ற படிப்புகளை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ‘டீன்’ ஆக இருந்த ரெத்தினவேலு ஒய்வு பெற்றார். அவரது பதிலாக பொறுப்பு ‘டீன்’ தர்மராஜ் இருந்து வந்தார். அவரும் ஒய்வு பெற்றநிலையில் புதிய டீன் நியமிக்கப்படாமலே மீண்டும் ‘பொறுப்பு டீன்’ ஆக இருதயவில் துறை பேராசிரியரான செல்வராணி நியமிக்கப்பட்டார். இவர் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிறந்த இருதயவியல் மருத்துவரான இவர் ‘பொறுப்பு டீன்’ ஆக பதவி உயர்வு பெற்றதை அறிந்த முன்னாள் ‘டீன்’ ரெத்தினவேலு, நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒய்வு பெற்ற பொறுப்பு டீன் தர்மராஜ் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் புதிய பொறுப்பு டீனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பொறுப்பு டீன் செல்வராணி, முன்னாள் மாநகராட்சி தலைமை பொறியாளர் மதுரத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் அனைவரும் மருத்துவம்படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2004-ம் ஆண்டு 2014 வரை மருத்துவத்துறையில் (Medicine Department) உதவிப் பேராசிரியராக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்தார். அதன்பிறகு 2012 முதல் 2015 சென்னையில் இருதவியல் (டிஎம்) பட்டமேற்படிப்பு படிக்க சென்றார். இருதயவியல் பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசியராக பணிபுரிந்தார். அங்கிருந்து டெப்டேஷனில் 7 மாதம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இருதயவில் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு அவருக்கு இணைப் பேராசிரியர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்று மதுரை அரசு மருத்துவமனை இருதயவியல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

கூடுதல் தகவலாக, இவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 83-ம் ஆண்டு பேட்ஜ் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர். அதன்பிறகு 1992-2002-ம் ஆண்டு இதே கல்லூரியில் எம்டி (General Medcine)படித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலே மத்துவ மாணவியாக படித்து, அதே கல்லூரியில் தற்போது ‘பொறுப்பு’ டீன் ஆக பொறுப்பேற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x