Published : 31 Aug 2024 06:15 AM
Last Updated : 31 Aug 2024 06:15 AM
புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் எனக் கூறியவர் என்றார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்தசவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், ‘‘சவுக்கு சங்கர் தொடர்பான ஒரேகாணொளி பல தருணங்களில்ஒளிபரப்பப்பட்டதற்காக 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிலுவை வழக்குடன் இந்த வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான அனைத்து எப்ஐஆர்-களையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க முடியாது. ஒவ்வொரு எப்ஐஆரும் வேறு விதமாக உள்ளன. அதேநேரம் அவரை மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது ஏன் என்பது குறித்தும், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக ஏன் விசாரணை செய்யக்கூடாது என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.2-க்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT