Last Updated : 22 Jun, 2018 05:02 PM

 

Published : 22 Jun 2018 05:02 PM
Last Updated : 22 Jun 2018 05:02 PM

குறைகேட்புக் கூட்டத்தில் கஞ்சா விதை கேட்டு அதிர வைத்த கடலூர் விவசாயி

கடலூர் மாவட்டத்தில் விவசாயக் குறைகேட்புக் கூட்டத்தில் கஞ்சா விதை கேட்டு விவசாயி ஒருவர் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.தண்டபாணி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விவசாயி குமரகுரு என்பவர், தனது கோரிக்கையாக, சித்த மருத்துவத்திற்கு கஞ்சா இலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு கஞ்சா செடி பயிரிடும் வகையில், கஞ்சா விதைகளை வழங்கிடவேண்டும் என வலியுறுத்தினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் தண்டபாணி, கஞ்சா செடி பயிரிடுவது சட்ட விரோதமானது. அதுபோன்று சட்ட விரோத செயல்களுக்கு அனுமதி கிடையாது. எனவே கஞ்சா செடி பயிரிடுவது தவறு எனக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக விவசாயி குமரகுருவிடம் கேட்டபோது, “தற்போது மனிதர்கள் விதவிதமான நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதுபோன்ற நோய்களை ஆங்கில மருத்துவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கனடா நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அந்த நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. அதுபோன்று, இந்தியாவிலும் சித்த மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா செடிகளை விதைத்து பயிரிட விவசாயிகளுக்கு விதைகளை வழங்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x