Published : 29 Apr 2014 10:30 AM
Last Updated : 29 Apr 2014 10:30 AM

காற்றாலை மின் உற்பத்தி மாலை நேரங்களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது: வானிலை ஆய்வறிக்கை அடிப்படையில் மின் துறை நம்பிக்கை

பருவக்காற்றுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ள நிலையில், மாலை நேரங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. நள்ளிரவு மற்றும் காலை நேரங் களில் மட்டும் காற்றாலை உற்பத்தி குறைந்துள்ளதால் இரண்டு மணி நேர மின் வெட்டு அமலாகி வருவதாக, மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானிலை குறித்து முன்கூட்டியே அறிய மின் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காற்றாலைகளிலிருந்து ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் மட்டுமே கணிசமான மின்சாரம் கிடைக்கிறது. மற்ற நேரங்களில் காற்றாலை மின்சாரம் நிலையில்லா மின்சாரமாகவே உள்ளது.

இந்நிலையில், தற்போது பருவக்காற்று வீசத் தொடங்கியுள் ளதால் கோடைகால மின் தட்டுப் பாட்டை காற்றாலைகளின் அதிக மின் உற்பத்தி மூலம் சமாளிக்க முடியுமென்று மின் துறை அதிகாரி கள் உரிய ஏற்பாடுகள் செய்துள்ள னர்.

கடந்த சில தினங்களாக, இரவு நேரங்களில் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவில் 884 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஆனால், நள்ளி ரவில் 95 மெகாவாட்டாகவும், திங்கள்கிழமை காலையில் 78 மெகாவாட்டாகவும் குறைந்து விட்டது. இதேபோல், தமிழக அனல் மின் நிலையங்கள் அனைத் தும் பழுதின்றி செயல்பட்டதால் திங்கள் கிழமை காலையில் அதிகபட்சமாக 3,640 மெகாவாட் உற்பத்தியானது.

மேலும், நீர் மின் நிலையங்களில் 698 மெகாவாட், ஒப்பந்தமிட்ட தனியார் மின் நிலையங்களில் 1,450 மெகாவாட், தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து விலைக்கு வாங்கியது 750 மெகாவாட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 270 மெகாவாட், மத்திய மின் நிலை யங்களிலிருந்து 3,830 மெகாவாட், வெளி மாநிலங்களிலிருந்து 764 மெகாவாட் என, திங்கள் கிழமை காலையில் மொத்தம் 11,657 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.

ஆனாலும், கோடை வெப்பம் காரணமாக கூடுதலாக தேவைப் பட்ட 1,370 மெகாவாட் மின்சாரம், சென்னை தவிர மற்ற இடங்களில் இரண்டு மணி நேர மின் வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர்.

தற்போது மாலை நேரங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள காற் றாலை மின் உற்பத்தி, மே முதல் வாரத்திலிருந்து அதிகரிக்கும் என மின் துறை அதிகாரிகள் நம்பிக் கையுடன் உள்ளனர். இதற்காக தினமும் வானிலை மைய ஆய்வறிக் கைகளைப் பெற்று அதனடிப் படையில், காற்று சீசன் எப்போது துவங்கும் என்று கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x