Last Updated : 25 Aug, 2024 04:30 PM

1  

Published : 25 Aug 2024 04:30 PM
Last Updated : 25 Aug 2024 04:30 PM

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் - இணையத்தில் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

கோப்புப் படம்

தென்காசி\திருநெல்வேலி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இணையதளத்தில் பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான விவரத்தை http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் 2.9.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ, ரயில்வே ரோடு, தென்காசி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7010797695, 7708330531, 7401703454 அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம், திருநெல்வேலி மாவட்டவிளையாட்டு அலவலக எண்: 0462 - 2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x