Published : 23 Aug 2024 08:35 AM
Last Updated : 23 Aug 2024 08:35 AM

விஜய் கட்சியால் திமுக வாக்குகள் சிதறும்: தம்பிதுரை கருத்து

கிருஷ்ணகிரி: அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு மத்திய அரசுப் பிரதிநிதிகளை நானும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோரும் அழைத்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. மாவட்டந்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம்.

இதைப் பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்று, பல மாவட்டங்களில் விழா நடத்த விடாமல் தடுத்தது திமுக. எனவே, எங்களை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கோ, திமுகவினருக்கோ அருகதை இல்லை. நடிகர் விஷால் கூட கட்சி தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், திமுகவின் வாக்குகள்தான் சிதறும். வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x