Last Updated : 19 Aug, 2024 09:38 AM

1  

Published : 19 Aug 2024 09:38 AM
Last Updated : 19 Aug 2024 09:38 AM

மதுரையில் அரசுப் பேருந்து மீது உரசிய மின்கம்பி: ஓட்டுநரால் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை: மதுரையில் அரசுப் பேருந்து மீது மின்கம்பி உரசிய நிலையில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று (ஆக.19) திருப்பரங்குன்றத்துக்கு சென்றது. திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது, அரசுப் பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் அந்தக் கம்பி அறுந்து விழுந்த்து இதை அறிந்த ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். ஓட்டுநர் சுதாரித்து நிறுத்தியதால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.

இது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர். இச்சூழலால் சுமார் ஒரு மணிநேரம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் அரசுப் பேருந்து மீது மின்கம்பி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க>> கோத்தகிரி: அரசுப் பேருந்து மீது உயரழுத்த மின்கம்பி உரசியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x