Published : 19 Aug 2024 05:15 AM
Last Updated : 19 Aug 2024 05:15 AM

வட சென்னையை மேம்படுத்த குடியிருப்போர் நல சங்கங்கள் கூட்டமைப்பு உருவாக்கம்

சென்னை: வட சென்னையை மேம்படுத்த குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பூர்வீக சென்னையாக வட சென்னை இருந்தது. மக்கள்தொகை பெருக்கம், மாநகரில் மக்கள் குடியேற்றம் போன்றவற்றால், சென்னை விரிவடைந்தது.

விரிவடைந்த தென் சென்னை போன்றபகுதிகளில் அண்ணா நூலகம், அழகியநிழற்சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. அதே அளவுக்கு வட சென்னையில் போதுமான வளர்ச்சி திட்டங்கள் இல்லைஎன்பது அப்பகுதி மக்களின் எண்ணமாகஉள்ளது.

இந்நிலையில் வட சென்னையை மேம்படுத்தும் விதமாக அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களையும் இணைத்து, வட சென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வட சென்னை வியாசர்பாடியில் நேற்று நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் தலைவராக டி.கே.சண்முகம், செயலாளராக ஆர்.ஜெயராமன், பொருளாளராக எம்.பொன்னுசாமி, கவுரவ தலைவராக ரெப்கோ வங்கி தலைவர் இ.சந்தானம் உள்ளிட்ட 104 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடசென்னையின் பாரம்பரியம் கால்பந்து. இது ஒரு குட்டி பிரேசில். கடல் சார் பொருளாதாரத்தின் முக்கிய பங்காற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால் கடல்சார் பொருளாதார மண்டலமாக அறிவிக்கவில்லை. திரைத்துறை வடசென்னையை குற்ற மாநகரமாக காட்டுவதை கைவிட வேண்டும்.

வட சென்னை போதையில்லா பகுதியாகவும், தொழில்சாலை மாசு இல்லாத பகுதியாகவும் மாற வேண்டும். வடசென்னை மேம்பாட்டுக்கு அதிக நிதிஒதுக்கி, ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிக அளவில் வட சென்னையில் கல்வி நிலையங்கள், நூலகங்கள், பொறியியல் கல்லூரிகள், குத்துச்சண்டை மைதானம் போன்றவற்றை அமைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இந்த கூட்டமைப்பை தொடங்கி இருக்கிறோம். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. மேலும் பலசங்கங்கள் இணைய உள்ளன. இக்கூட்டத்தில், வட சென்னையில் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x