Published : 27 May 2018 09:26 AM
Last Updated : 27 May 2018 09:26 AM
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனஞ்செயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் சில்வா பொதுஜன பெரமுன கட்சியின் (முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கட்சி) கொழும்பு மாநகர உறுப்பினராக இருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு கொழும்பு ஞானாந்த பகுதியில் தனஞ்செயா வீட்டின் அருகில் உள்ள ரயில் தண்டவாள பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் சில்வா (62) உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தனஞ்செயா டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகினார்.
இதுகுறித்து தனஞ்செயா குடும்பத்தினர் கூறும்போது, ‘‘இந்த மாத தொடக்கத்தில் ஞானாந்த பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தோம். அதன் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது’’ என்றனர்.
இதுதொடர்பாக, காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT