Published : 15 Aug 2024 06:12 AM
Last Updated : 15 Aug 2024 06:12 AM
சென்னை: சுதந்திர தின விழா மற்றும் தொடர்விடுமுறையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063-ல் இருந்து ரூ.11,716 ஆகவும், சென்னை- தூத்துக்குடிக்கு ரூ.4,301-ல்இருந்து ரூ.10,796 ஆகவும்,சென்னை - திருச்சிக்கு ரூ.2,382-ல் இருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை - கோவைக்கு ரூ.3,369-ல் இருந்து ரூ.5,349 ஆகவும், சென்னை - சேலத்துக்கு ரூ.2,715-ல் இருந்து ரூ.8,277 ஆகவும் உயர்ந்துள்ளது.
இருந்தபோதும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...