Published : 15 Aug 2024 04:50 AM
Last Updated : 15 Aug 2024 04:50 AM
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுகசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதன் பகுதியாக சென்னை, ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன்,கே.கழககுமார், டி.சி.ராஜேந்திரன்,சைதை ப.சுப்பிரமணி, இணையதள அணி ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட் டத்தில் வைகோ பேசியதாவது:
தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல் கிறது. ரூ.37,500 கோடி வேண்டும் என முதல்வர் கேட்ட நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. பாஜகவின் கூட்டணி ஆளும் ஆந்திரா, பிஹாருக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதைப் போலவே சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மாநில அரசு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில், மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. இது தமிழகத்தின் உரிமைபிரச்சினை.
மேகேதாட்டு அணை கட்டும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அணை கட்டுவதை தடுக்க மாட்டோம் என்கிறார். அணை கட்ட விடக்கூடாது என்பதில் திமுக அரசுஉறுதியாக இருக்கிறது. மாநிலஅரசுக்கு பக்க பலமாக தோழமைகட்சிகள் ஒரு சேர நிற்கும். பங்குசந்தை ஊழல் பிரச்சினையாகி இருக்கிறது. செபி மீது பழியை போட்டு எங்களை வஞ்சிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT