Published : 15 Aug 2024 04:50 AM
Last Updated : 15 Aug 2024 04:50 AM

நமது நாட்டில் பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிடமும் ஒன்று: ஆளுநர் ஆர்.என்.ரவி. மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை: நமது நாட்டில் பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில், திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை ஐஐடி மற்றும்ஆளுநர் மாளிகை சார்பில், தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காகூட்டரங்கில் நேற்று அனுசரிக் கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பாரதம் வன்முறை நாடாக்கப்பட்டு, பல கொடூரங்கள், நாட்டுபிரிவினையால் நடந்தன.

பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் பெரும்பகுதி ஆக்கிரமித்தது. அதை மறந்துவிட்டோம். 30 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுத்ததால் நமது மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

65 ஆண்டுகளாக பாரதத்தை ஆண்டவர்கள் சிந்தனையை உடைக்க நினைத்தனர். அனைவரும் ஒன்று என்பதே பாரதத்தின்சிந்தனை. நமது மதச்சார்பின்மை யும், ஐரோப்பாவின் மதச்சார்பின்மையும் ஒன்றல்லை. நமது மதச்சார்பின்மை அனைவரும் ஒன்று என சொல்கிறது.

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைக்கும் வேலை களைச் செய்கின்றனர். 1947-ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன.

அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தது. 1960 போரில் இந்திய இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தனர். அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் அண்டை நாட்டு ராணு வத்தால் சுடப்படுகிறார்கள். இவ்வாறு ஆளுநர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x