Published : 21 May 2018 05:34 PM
Last Updated : 21 May 2018 05:34 PM
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென கர்நாடக முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறுகையில், ''கர்நாடக மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார், அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளேன். காவிரி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குமாரசாமியை சந்திக்கும்போது கோரிக்கை வைப்பேன்'' என தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணாதீங்க:
நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: மாநில வருவாயை எப்படி விட்டுத்தர முடியும்?-அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT