Published : 14 Aug 2024 04:20 AM
Last Updated : 14 Aug 2024 04:20 AM

சென்னையில் இருந்து நாகர்கோவில், கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினம் விடுமுறை, வார இறுதி நாட்கள் விடுமுறையை ஒட்டி,சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஆக.14) இரவு 11.30 மணிக்கு ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் (06055) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஆக.15-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் (06056) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.10 மணிக்குஆவடியை அடையும். இந்த ரயிலில்14 மூன்றடுக்கு ஏசி எக்னாமிக் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அதிவிரைவு ஏசி ரயில் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் நிலையங்களில் நின்றுசெல்லும். நாகர்கோவிலில் இருந்துபுறப்படும் சிறப்பு ரயில் ஆவடி நிலையத்துடன் நிறுத்தப்படும்.

சென்னை - கொச்சுவேலி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக. 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு ஏசி சிறப்பு விரைவு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து ஆக. 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.25 மணிக்கு ஏசி சிறப்பு விரைவு ரயில் (06044) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.25 மணிக்கு சென்ட்ரலை அடையும்.

இந்த ரயிலில் 15 மூன்றடுக்கு ஏசி எக்னாமிக் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூர், போத்தனூர், திரிச்சூர் வழியாக கொச்சுவேலியை அடையும். இந்த 2 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x