Published : 14 Aug 2024 04:50 AM
Last Updated : 14 Aug 2024 04:50 AM

சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை: முதல்வருக்கு வாரிசுகள் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த கூட்டமைப்பின் தலைவர் நா.விஜயராகவன் அனுப்பி யுள்ள மனுவை, பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் பரிந்து ரைத்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால், தியாகிகளின், மகன்கள், மகள்கள் இதனை பெற முடியாத சூழல் உள்ளது.

சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தியாகிகளின்வயது 100-ஐ கடந்திருக்கும். அவர்களின் மகன், மகளின் வயது 60-ஐகடந்திருக்கும். எனவே, கல்விவேலைவாய்ப்பில் அளிக்கப்படும் முன்னுரிமையை சுதந்திரபோராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு அளிக்க வேண்டும்.

மதுரையில் ஆதிதிராவிட மக்களுடன் மீனாட்சியம்மன் கோயிலில் பிரவேசித்த தியாகி வைத்தியநாத ஐயருக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். தியாகிகளுக்கு மத்திய அரசுவழங்கும் உதவித்தொகையுடன், மாநில அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டும். தியாகிகளுக்கு வழங்கப்படும் வீட்டு மனை, காலிமனை ஒதுக்கீட்டில் தனியாக சுதந்திர போராட்டதியாகிகளுக்கு 5 சதவீதம் ஒதுக் கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x