Published : 10 Aug 2024 05:37 AM
Last Updated : 10 Aug 2024 05:37 AM

கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும் உள்ளது.

இதுகுறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றமே, அக விலைப்படி உயர்வு வழங்கக் கூறிதீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அரசுத் துறை களில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அநாவசிய செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக் கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல.

உடனடியாக, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன்ஆகியவற்றை உடனே நிறை வேற்ற வேண்டும்.

பொங்கல் வரை இழுத்தடித்து, மீண்டும் வழக்கம்போல போராட் டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களை தள்ளவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x