Published : 08 Aug 2024 05:13 AM
Last Updated : 08 Aug 2024 05:13 AM
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையம் வெளியிட்ட அறிக்கை: மனைப்பிரிவு, கட்டுமான இடத்துக்கான அனுமதிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.5 பதிவுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் 60 சதுரமீட்டருக்குள் இருந்தால், தளப்பரப்பு குறியீடு அளவுக்கு ஒருசதுரமீட்டருக்கு ரூ.10-ம், 60 சதுரமீட்டருக்கு மேல் கட்டப்பட்டால் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.20-ம் செலுத்த வேண்டும்.
வர்த்தகக் கட்டிடங்களைப் பொறுத்தவரை, தளப்பரப்பு குறியீடு அளவில் ஒரு சதுரமீ்டடருக்கு ரூ.60-ம், இதர கட்டிடங்களுக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.25-ம்பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். பல்வேறு துறைகளிடம் இருந்து பணி முடிப்பு சான்றிதழ் பெறுவதற்கான தடையில்லா சான்று பெற ஒவ்வொரு கோரிக்கைக்கும் தலா ரூ..2 ஆயிரம், மனைப்பிரிவை பத்திரப்பதிவு செய்வதற்கு தடையில்லா சான்று பெற ஒவ்வொரு மனைக்கும் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
கட்டுமானம், மனைப்பிரிவு திட்டத்தைப் பதிவு செய்தபின், திட்டத்தின் பெயர் மாற்றம், வங்கி மற்றம், நிறுவன பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5 ஆயிரம், திட்டச்சான்று உண்மை நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.2 ஆயிரம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட்ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ்பெற ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம், செயல்பாட்டுக்கான மனுவுக்கு ரூ.1,600 செலுத்த வேண்டும்.
முகவர் பதிவு காலாவதியாகும் நாளுக்கு ஒருமாதம் முன்னர் பதிவை புதுப்பிக்க தனி நபர் ரூ.5 ஆயிரமும், மற்றவர்கள் ரூ.50ஆயிரமும் செலுத்த வேண்டும். காலாவதியான பின் புதுப்பிக்க, தனி நபர் என்றால் புதுப்பித்தல் கட்டணம் மற்றும் தாமதக்கட்டணம் சேர்த்து ரூ.5,500-ம், மற்றவர்கள் ரூ.55 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
பதிவு நீட்டிப்புக்கு, முதல் நீட்டிப்புக்கு பதிவுக்கட்டணத்தில் 10 சதவீதம், 2-வது நீட்டிப்புக்கு 20 சதவீதம், 3-வது நீட்டிப்புக்கு 30 சதவீதம், 4-வது நீட்டிப்புக்கு 40 சதவீதம், 5-வது நீட்டிப்புக்கு 50 சதவீதம் என ஒவ்வொரு நீட்டிப்புக்கும் 10 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பதிவு காலாவதியாகும் நாளில் இருந்து 3 மாதம் முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதலாக 10 சதவீதம் தொகை வசூலிக்கப்படும். இந்த கட்டண மாற்றம் கடந்த மாதம்15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT