Last Updated : 23 May, 2018 02:04 PM

 

Published : 23 May 2018 02:04 PM
Last Updated : 23 May 2018 02:04 PM

புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பில் 94.37 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்வில் 94.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.7 சதவீதம் அதிகம் என்று கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வரும் கல்வியாண்டில் நடவடிக்கை எடுப்பதுடன் 520 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

''புதுச்சேரி, காரைக்காலில் 305 பள்ளிகள் மூலம் 17,432 பேர் தேர்வு எழுதினர். இதில் 16,450 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.37. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 0.70 சதவீதம் அதிகம்.

மாணவிகள் 8359 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.5 சதவீதம். மாணவர்கள் 8091 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.26. மாணவர்களை விட மாணவியர் 4.24 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி பகுதியில் 94.69 சதவீதமும், காரைக்காலில் 92.65 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் 88.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 88.05 சதவீதம் பேரும், காரைக்கால் பகுதியில் 88.08 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்காலில் 157 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் புதுச்சேரியில் 125 பள்ளிகளும், காரைக்காலில் 32 பள்ளிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 111 அரசுப் பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளில் 22 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் புதுச்சேரியில் 15 அரசுப் பள்ளிகளும், காரைக்காலில் 7 அரசுப் பள்ளிகளும் உள்ளன.

அரசுப் பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வரும் கல்வியாண்டில் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.பள்ளி தரத்தை ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளோம். மேலும் காலியாக உள்ள 520 ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நூலகர் மற்றும் கிராப்ட் பயிற்சியளிக்க 125 ஆசிரியர்கள் வரை தனியாக வரும் கல்வியாண்டில் நியமிக்க உள்ளோம். நிதித்துறையும் ஒப்புதல் தந்துள்ளது.''

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x