Published : 07 Aug 2024 06:43 AM
Last Updated : 07 Aug 2024 06:43 AM

கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல்செய்துள்ள மனுவில், "கூகுள்தளத்தில் தவறான நபர்கள்ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளாக விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாசப்புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு மன பாதிப்பைஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர்கொண்ட முதல் அமர்வானது கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x