Published : 06 Aug 2024 04:45 AM
Last Updated : 06 Aug 2024 04:45 AM
சென்னை: சர்வதேச அளவில் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 5-ம் தேதி ‘சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம்’கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, திரு.வி.கநகர் சந்திப்பு ஆகிய 5 இடங்களில் உள்ள சிக்னல்களில் நேற்று இதயம் வடிவில் போக்குவரத்து சிக்னல்கள் ஒளிர்ந்தன.
போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று ஒளிரச் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதயம் வடிவில் ஒளிர்ந்த போக்குவரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் கவனித்து கடந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT