Published : 05 Aug 2024 06:46 AM
Last Updated : 05 Aug 2024 06:46 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, கனமழையுடன் கடுங்குளிரும் நிலவியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முக்கிய சுற்றுலாத் தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப்பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் மற்றும் பிற சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலுடன், இதமான காலநிலை நிலவுகிறது.
விடுமுறை தினமான நேற்று உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. கர்நாடகா. கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் படகு இல்ல ஏரியில் படகுச் சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். வார இறுதி நாள் என்பதால், பிற சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT