Published : 03 Aug 2024 10:22 PM
Last Updated : 03 Aug 2024 10:22 PM

உலக அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் - மகள் சாதனை!

சென்னை: சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர்.

1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் இப்படியொரு சாதனையை இந்திய அளவில் முதல் முறையாக நடந்தேறியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் 9 நாட்கள் இந்த போட்டி நடைபெற்றது. இதில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, “மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள்” என்ற பட்டத்தையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளனர்.

தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் சரிஹா, தனது தாய் திருமதி உலக அழகி போட்டிகளில் பங்கேற்பதை பார்த்தே தானும் அழகி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறுகிறார்.

சரிஹாவின் தாயார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மாடலிங் துறையில் எவ்வித அனுபவமும் இலலாதவர். இருப்பினும், மனநல நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர், 2021ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பங்கேற்று, ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தையும், துணைப்பிரிவில் ‘கிளாமரஸ் அச்சீவர்’என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

அதேபோல் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்று "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றார். தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் Ms Spirit of world univers and Ms international world People Choice பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும், அழகு துறையில் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள பிளாரன்ஸ், “பெண்கள் எப்போதும் சாதிக்கப் பிறந்தவர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக்கொள்ளாமல், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள். ஒருநாள் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்” என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x