Published : 03 Aug 2024 06:06 AM
Last Updated : 03 Aug 2024 06:06 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர், திருவனந்தபுரம் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

சென்னை: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண். 16128) ஆக. 16 முதல் 26-ம் தேதி வரை கோட்டயம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

எனவே, இந்த ரயில் மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம், சேர்தலா, ஆலப்புழா ஆகிய ரயில் நிலை யங்களில் நிற்காது. எனினும், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் கோட்டயம், செங்கனாசேரி, திருவல்லா மற்றும்செங்கனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் வரும் 4, 5, 8 மற்றும் 10-ம் தேதியன்று, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். எ

னவே, இந்த ரயில் மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல், சோழவந்தான், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. எனினும், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் 8-ம் தேதி இந்தரயில் புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நின்று செல்லும். எனவே, இந்த ரயில் மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல், சோழவந்தான், கூடல் நகர் மற்றும்மதுரை ஆகிய ரயில் நிலையங் களில் நிற்காது. எனினும், பயணிகளின் வசதிக்காக காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (12697) வரும் 18 மற்றும் 25-ம்தேதி கோட்டயம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம், ஆலப்புழா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

எனினும், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் எர்ணாகுளம் டவுன் மற்றும் கோட்டயம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x