Published : 01 Aug 2024 08:37 PM
Last Updated : 01 Aug 2024 08:37 PM

நிரம்பியது பைக்காரா அணை: விநாடிக்கு 450 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றம்

பைக்காரா அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்.

உதகை: உதகையில் உள்ள பைக்காரா அணை நிரம்பியதால் 3 மதகுகள் வழியாக விநாடிக்கு 450 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல் மே மாதங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக தென்மேற்கு பருவமழை மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டு தோறும் சராசரியாக 750 மில்லி மீட்டர் மழை கிடைக்கும்.

ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக மழைப்பொழிவு இருப்பதால் சராசரி அளவை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த வாரம் குந்தா அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குந்தா, பில்லூர் அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது முக்கூர்த்தி அணை நிரம்பி உபரி நீர் பைக்காரா அணைக்கு வந்து கொண்டுள்ளது. மேலும், அருகில் உள்ள ஓடைகள் மூலமும் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் பைக்காரா அணைக்கு வருகிறது. இதனால் 100 அடி உயரமுள்ள பைக்காரா அணையில் இருந்து ஒரு மதகு மூலம் 150 கன அடி என 3 மதகுகள் மூலமும் விநாடிக்கு 450 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழையளவு அதிகரித்தால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், குந்தா, பைக்காரா நீர்மின் திட்ட அணைகளில் 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அனைத்து அணைகளும் முழு கொள்ளவை விரைவில் எட்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரியில் அணைகளில் தற்போதைய நிலவரப்படி தண்ணீர் இருப்பு நிலவரம்:
அணை – கொள்ளளவு – இருப்பு(அடியில்)
முக்கூர்த்தி - 18-16
பைக்காரா - 100-90
கிளன்மார்கன் - 33-28
மாயாறு - 17-16
பார்சன்ஸ்வேலி - 77- 62
போர்த்தி மந்து - 130- 102
அவலாஞ்சி - 171-135
எமரால்டு - 184- 130
குந்தா - 89-89
கெத்தை - 156- 154
சாண்டிநல்லா - 45 - 38

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x