Published : 01 Aug 2024 04:56 AM
Last Updated : 01 Aug 2024 04:56 AM
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்நத்தம் விஸ்வநாதன் சிகிச் ைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைப் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பின்னர், இரவில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
ராமதாஸுக்கு பரிசோதனை: இதற்கிடையே, சென்னை அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
85 வயதாகும் ராமதாஸுக்கு வயது மூப்பு காரணமாக உடலில் சில பிரச்சினைகள் உள்ளன. இதற்காக அவர்அவ்வப்போது மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக பாமக வினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ராமதாஸ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு சென்றுவிட்டு, வீடுதிரும்பிவிட்டார். வேண்டும் என்றே பொய்யான தகவலையும், வதந்திகளையும் பரப்புவது கண்டிக்கத்தக்கது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT