Published : 31 Jul 2024 01:51 PM
Last Updated : 31 Jul 2024 01:51 PM
திருவாரூர்: “தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காததே மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியஅரசு தமிழகத்தை புறக்கணித்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக அதிக ஜிஎஸ்டி வரியை தமிழகம் தான் மத்திய அரசுக்குக் கொடுக்கிறது. எனவே, பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்து, தமிழகத்துக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும்” என்றார்.
கள் இறக்க அரசு அனுமதியளிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக அரசு, கள்ளுக்கடையை திறக்க கூடாது என கொள்கை முடிவில் உள்ளது. இந்த விஷயத்தில் அரசின் முடிவை நானும் ஆதரிக்கின்றேன். மின் கட்டண உயர்வு அனைவரையும் பாதிக்கும் விஷயம்தான், இருப்பினும் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதால் இதுபோன்ற கட்டண உயர்வுகள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT