Published : 31 Jul 2024 05:12 AM
Last Updated : 31 Jul 2024 05:12 AM

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x